திருச்சி : ஒரு கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 56 கிராம் தங்கம் பறிமுதல் !
திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கக்கட்டிகள், அயல்நாட்டு மதுபானங்கள் சிகரெட் பிடிபடுவது வாடிக்கை ஆனால் சமீபகாலமாக தங்ககடத்தல் அதிகமாகி இருக்கிறது நேற்று ஜீன்ஸ் பேண்ட்டில் 390 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்த உடன் ஸ்ரீலங்காவில் இருந்து வந்த பயணி யாரோ ஒருவர் தங்க பேஸ்ட்களை கவரில் வைத்து பேக் செய்து கழிவறைக்கு அருகே போட்டு சென்றுள்ளார்.
கண்காணிப்பு கேமராவை வைத்து யார் இந்த தங்கத்தை கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கவரில் ஒரு கிலோ 56 கிராம் தங்க இருந்துள்ளது இதன் மதிப்பு ஒரு கோடியே மூன்று லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினம்தினம் தங்கம் பிடிபட்டாலும் கடத்தல் மட்டும் குறைந்தபாடில்லை இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே போவதால் வெளிநாடுகளில் இருந்து இங்கே கடந்தி வருவது அதிகரித்து வருகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.