திருச்சி : காவல் நிலையம் முன்மொழியப்பட்டது !
தற்பொழுது திருச்சியில் பஞ்சாப்பூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் திறப்புவிழா வெகு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரும் பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவை திருச்சி நகர காவல்துறை முன்வைத்துள்ளது.
காவல் நிலையத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு மாநில காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஒரு சில சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இதர நிலைகளில் உள்ள பணியாளர்கள் ஸ்டேஷனைக் கட்டுப்படுத்துவதாக திட்டமாம்.
புதிய காவல் நிலையத்தின் தேவைதான் ஏனெனில் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பேருந்துகள் – அரசு மற்றும் தனியார் – அதிக இயக்கம் இருக்கும். கன்டோன்மெண்டில் செயல்பட்டு வரும் மத்திய பேருந்து நிலையத்தை மாற்றி, அப்பகுதி நெரிசலைக் குறைக்கும் நோக்கில் திருச்சி மாநகராட்சி சார்பில் ரூபாய் 300 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர காவல்துறை அதன் அதிகார வரம்பில் கோட்டை, காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம், தில்லை நகர் மற்றும் கன்டோன்மென்ட் உட்பட 14 காவல் நிலையங்கள், நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிரண்டு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. புதிய காவல் நிலையத்திற்கான முன்மொழிவைத் தயாரிக்கும் போது பஞ்சாப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள், அனுமதி கிடைத்ததும், தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம் கட்டுமான பணியை துவக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படியே ஸ்ரீரங்கத்தை பிரித்து திருவானைக்கோவிலில் ஒரு காவல்நிலையம் வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் ஆசை ஆசையை நிறைவேற்றுமா அரசு !