திருச்சி : திருட்டுப் போன 155 மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு !!
திருச்சி மாநகரப் பகுதியில், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 4 மாதங்களில் திருட்டுப் போன மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது திருட்டுப் போன 155 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 105 மொபைல்கள் திருட்டுப் போனதாக புகார்கள் வந்துள்ளன.
அவற்றையும் கண்டுபிடித்து கூடிய விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா பறிமுதல் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். கஞ்சா மட்டுமல்ல போதை மாத்திரை விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.