திருச்சி – பெங்களூரு இடையே விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் !

0

திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை ரயில் புறப்பட்டு அன்று மாலையே திரும்பும் வகையில் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு சமீபத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது… பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி கேந்திரா (பிஎம்பிஜேகே) விற்பனை நிலையங்களை முன்னோடித் திட்டமாக நிறுவுவதற்காக நாட்டிலுள்ள 50 ரயில் நிலையங்களில் ஒன்றாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 12 ம் தேதி திருச்சி சந்திப்பு உட்பட அடையாளம் காணப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள விற்பனை நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். PMBJK ஐ நிறுவுவதற்கான நோக்கங்களில் ஒன்று, அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் மற்றும் நுகர்வு பொருட்கள் (ஜனௌஷாதி தயாரிப்புகள்) கிடைக்கச் செய்வதற்கான இந்திய அரசின் நோக்கத்தை மேம்படுத்துவதாகும். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

logo right

திருச்சி கோட்டத்தின் கீழ் வரும் பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களில் உள்ள சரக்கு காப்பகம் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் புதிய சரக்கு காப்பகம் அடங்கும். பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் ரூபாய் 6.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சரக்கு காப்பகம் ரூபாய் 7 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் பட்டுக்கோட்டை சரக்குக் காப்பகத்தில் தானியங்கள் (அரிசி மற்றும் நெல்) ஏற்றுதல் தொடங்கப்பட்டு இதுவரை 42 வேகன்களில் ஏற்றப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி சரக்குக்காப்பகத்தை பொறுத்தவரை, 2023 நவம்பரில் துவங்கி, இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSOP) ஸ்டால்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று அன்பழகன் தெரிவித்தார். திருச்சி கோட்டத்தில் உள்ள 44 நிலையங்களில் அறுபது ஓஎஸ்ஓபிகள் இயக்கப்பட்டன. திருச்சி சந்திப்பு, தஞ்சாவூர், விழுப்புரம், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, மன்னார்குடி, கடலூர் துறைமுக சந்திப்பு, திருவண்ணாமலை, காரைக்கால், சிதம்பரம், திருச்சி கோட்டை, விருத்தாசலம், அரியலூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

OSOP திட்டம் ரயில்வே அமைச்சகத்தால் உள்ளூர் / உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்கவும், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் தொடங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.