திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி… லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது !
திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலிமனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக 1.3.2024ம் தேதி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் 27 2 2024 அன்று திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரிராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் விதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களின் தலைமையில் ஆய்வாளர்கள் திரு சக்திவேல் திரு பாலமுருகன், திருமதி சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் நேற்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபாலகிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரிராஜன் தனிநபர் சூர்யா என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் காளவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.