திருச்சி : விமான நிலையத்தில் 1061 கிராம் தங்கம் பறிமுதல் !
திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் உடலில் மறைத்து தங்க பேஸ்ட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து 1061 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பயணியிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 66 லட்சத்து 68 ஆயிரம் என தெரிவித்தனர்.
எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் தங்கக்கட்டியை கடத்தி வருவது தொடர்கதையாக தொடர்கிறது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான் போல.