திருச்சி விமான நிலையம் அள்ளிக்குவிக்குது வருவாயை !
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி தேசிய கொடியேற்றி வைத்து பேசும் பொழுது, திருச்சி சர்வதேச விமான நிலையம் கடந்த டிசம்பர் வரை 12.80 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 17 சதவீதம் அதிகம் 10 ஆயிரத்து 350 விமானங்கள் இதே காலக்கட்டத்தில் கையாளப்பட்டுள்ளன தினமும் 6 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர் இதன் மூலம் விமான நிலையத் தின் வருவாய் ரூபாய் 117 கோடியாக அதிகரித்துள்ளது.
புதிய டெர்மினல் மிக பிரமாண்டமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஒரே சமயத்தில் 19 விமானங்களை நிறுத்தும் வசதி கிடைத்துள்ளது புதிய டெர்மினலில் உள்ள வசதி மூலம் பயணிகள் நீண்ட நேரம் நிற்காமல் தங்களது உடமைகளை உடனுக்குடன் எடுத்துச் செல்ல முடியும் என்றார்.
கடந்த ஜனவரி 2ம் தேதி திருச்சி வருகை தந்த பாரதப்பிரதமர் திரு மோடி அவர்கள் இரண்டாவது முனையத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.