திருத்தலங்களில் தமிழ்நாடு ஆளுநரின் வசிட்…
திரு ஆர்.என். ரவி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் புத்தாண்டு முதல் ஒவ்வொரு கோவிலாக விஜயம் செய்து வருகிறார் நேற்று இராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தவர் இன்று காலை ஜனவரி 17ம் தேதி திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசனம் செய்தார், கோவிலில் அவரையும் அவர் மனைவியையும் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்து யானை ஆசிர்வாதம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பின்னர் சர்க்யூட் ஹவுஸ் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில், கம்பர் மேடு – ஏஎஸ்ஐ தளம் மற்றும் மணி மண்டபம், செல்கிறார். அங்கு மாண்புமிகு ஆளுநர் ASI தளத்தைப் பார்வையிடுகிறார், மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ‘அயோத்தி’ பொது விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கும்பகோணம் செல்லும் ஆளுநர் அங்கே ராமனும் தமிழ் கம்பனும் விழாவில் பங்கேற்கிறார்.அதன்பின் சாலை வழியாக திருச்சி விமான நிலையம் வந்து சென்னைக்கு செல்கிறார்.