திருவானைக்கோவிலில் நாளை தைத்தெப்ப உற்ஸவம்…
திருவானைக்கோவில் தைத்தெப்ப உற்ஸவவிழா ஜனவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் புறப்பட்டு 4ம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். விழாவில்ன் 9ம் திருநாளான திங்கள்கிழமை மாலைசுவாமிநந்திவாகனத்திலும், அம்மன் சேஷவாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடராஜர் கேடயத்திலும், அம்மன் மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். மாலை 6 மணிக்கு சுவாமி யாழிவாகனத்திலும், அம்மன் புலி வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.
தைத்தெப்ப திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதை யொட்டி மாலை 5 மணிக்கு உற்ஸவ மண்டபத்தில் இருந்து சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு இராமதீர்த்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்ஸவம் கண்டருளுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.