திருவானைக்கோவில் அஞ்சலகத்தில் இல்லை ஆதார் சிறப்பு முகாம்..

0

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்கு உள்ளிட்ட ஸ்ரீரங்கம், பெரம்பலுார், துறையூர் தலைமை அஞ்சலகங்களில் அனைத்து பணி நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை வழங்கப்படுகிறது. பிச்சாண்டார்கோவில், சமயபுரம், சிறுகாம்பூர், இருங்களூர், மண்ணச்சநல்லுார், தொட்டியம், முசிறி, காட்டுப்புத்துார், எரகுடி, மேட்டுப்பாளையம், கீரம்பூர், கண்ணனுார், சிக்கத்தம்பூர், புலிவலம், பாடாலுார், செட்டிகுளம், குன்னம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், வி.களத்துார் ஆகிய அஞ் சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடக்கிறது. இதில் புதிய ஆதார் பதிவு இலவசமாகவும், பழைய ஆதாரில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூபாய் 50, கைரேகை கண் விழித்திரை மறுபதிவு செய்வதற்கு ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் 19 ஆயிரத்து 450 பேர் இந்த சேவை மூலம் பயன் அடைந்துள்ளனர். அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்காக 365 அஞ்சல் அலுவலகங்களிலும் சேர்க்கை மற்றும் புதுப்பிக்கும் முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் திருவானைக்கோவில் அஞ்சலகத்தில் இந்த வசதி இல்லாத காரணத்தால் ஆட்டோவிற்கு கட்டணம் கொடுத்து ஆதார் அட்டையை புதுப்பிக்க ஸ்ரீரங்கம் சென்று வருகின்றனர் இளம்வயதினர் என்றால் சரி முதியோர் என்றால் ?

Leave A Reply

Your email address will not be published.