தூய்மை பணியாளர்களுக்கு உணவு !
ஸ்ரீரங்கத்தில், இந்திய பிரதமர் வருகையை ஒட்டி, இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும், துப்புரவு தொழிலாளிகளுக்கு, உண்ணும் உணவை, குப்பை வண்டியில், ஏற்றிச் செல்லும், அவலம். திருச்சிக்கு சமீபத்தில்தான் சுத்தமான மாநகராட்சி என்ற சாதனை விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது தமிழ்நாட்டின் No.1 சிறந்த மாநகராட்சியாக்க அயராது பாடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவை பரிமாற கொண்டு சென்ற புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.ஊருக்குத்தான் உபதேசம் இவர்கள்தான் சமூகநிதி காவலர்கள் என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள் என நெட்டிசன்கள் ஒருபுறம் கழுவி ஊற்றிக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என கூக்குரல்கள் நான்கு திசைகளில் இருந்தும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.