தைமாத பிரதோஷ தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம்…

0

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு தை மாத பிரதோஷம் மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். தைமாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

logo right

இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பதும் ஐதீகம்,, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

இன்று நடைபெற்ற தைமாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமிதரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.