தொல்லைதரும் ’தொப்பூர்’ மேம்பாலம்…நால்வர் கருகி பலி…
தருமபுரி மாவட்டம் தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது.இதில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி இரண்டு கார்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கார்கள் தீப்பற்றி எரிந்தது.
இரட்டை பாலத்தை உடைத்து கொண்டு ஒரு லாரி ஒரு கார் பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கியது.இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் கருகி உயிரிழக்க மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிக்கிடையில் சிக்கி இருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் அவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. .தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு காரில் தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் மூன்று உடல்களை மீட்டனர்.சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியிலும் போக்குவரத்தை சரி செய்ய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறந்தவர்களின் விபரங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்னும் தெரியவில்லை மீட்பு பணிகள் முடிந்து பின்பு தெரியவரும் என கூறப்படுகிறது.
வேகம் விவேகம் அல்ல ஓட்டுநர்களுக்கு மட்டுமல்ல திட்டமிட்டு பாதையை அமைக்காத அரசிற்கும் கூட, காரணம் அவசர கதியில் திறக்கப்பட்டதால் அங்கே தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பதும் அந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.