நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி பேச்சு ! கூச்சல் குழப்பம் !!
இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும், ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விட்டது. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை.
காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது, இளம் எம்.பிக்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது, எதிர்க்கட்சிகளுக்கு பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் என யாரும் சிறுபான்மையினராக தெரியவில்லையா, இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல், 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும், இது மோடியின் கியாரண்டி. வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், மேக் இன் இந்தியா நாட்டின் சாதனைகள், அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கமாக இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவின் GDP 11-வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது; விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும், உலகின் நலனுக்காக இந்திய பாடுபடுவதை G-20 மாநாடு மூலம் உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. பாஜக-வின் 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும். பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும். அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி. கடந்து 10 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது.
எப்போது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வும் வருகிறது, முத்ரா திட்டத்தின் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர். முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிகாலங்களில் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே சென்றன, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி Emergencyயை அமல்படுத்திய காலத்தில 30 சதவிகித விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது, டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது, இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை, இந்தியாவில் பெண்களுக்கு இடமில்லாத எந்த துறையும் இன்று இல்லை, பெண்களின் சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது.
முன்பு பெண் குழந்தைகள் பிறப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது; இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்து விட்டது, இந்தியர்களை பற்றி முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கருத்து உயர்வானதாக இருத்ததில்லை. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்.
பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் 370 சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வந்தோம். இந்திய மக்கள் முன்பை விட பாஜகவிற்கு அதிக ஆதரவு கரம் கொடுக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே பள்ளத்தில் இருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக செய்த திட்டங்களை மக்கள் உணர்ந்துள்ளனர் , 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடுகளும், 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும், பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும் இவ்வாறு இடியென் முழங்கி முடித்தார் பிரதமர் மோடி எதிர்கட்சியினர் எப்பொழுதும் போல கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர்.