நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தம் அமைச்சர் நேரு அதிரடி !!
திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, நாளை சேலத்தில் நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் நிருபர்களிடம் பேசினார் அப்பொழுது திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சனிக்கிழமை மாலை 5. மணிக்கு விமானத்தில் சேலம் வருகிறார்.சென்னையில் இருந்து புறப்பட்ட சுடர் ஓட்ட தீபத்தை வரவேற்று முதல்வர் சுடரை ஏற்றி வைக்கிறார். ஆயிரம் டுரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட டுரோன் ஷோ நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்கிறார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைக்கிறார். பின்னர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகிறது.
தொடர்ந்து இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். திமுக இளைஞரணி மாநாடு, வரும் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக இருக்கும். திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது என்றவர்.
மாநாட்டின் பந்தல் வெளியே இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் மீசையை தடவியபடி.