நாடாளுமன்ற தேர்தல் குழுவை அறிவித்த காங்கிரஸ்..

0

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால், எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழக தேர்தல் குழுவை அறிவித்துள்ளார் அதில் 35 நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.1. கே.எஸ். அழகிரி, தலைவர் – TNCC- தலைவர் 2. கே.செல்வ பெருந்தகை 3. ப.சிதம்பரம் 4. குமரி அனந்தன் 5. மணி சங்கர் ஐயர் 6. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்7. டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்8. டாக்டர் ஏ செல்லகுமார்9. பி. மாணிக்கம் தாகூர்10. கே.வி. தங்கபாலு11. எம். கிருஷ்ணசுவாமி12. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்13. சு. திருநாவுக்கரசர் 14. கே.ஆர் ராமசாமி 15. கே. கோபிநாத் 16. டாக்டர். கே.ஜெயக்குமார் 17. டாக்டர். எம்.கே. விஷ்ணுபிரசாத் 18.திருமதி. ஜோதிமணி19.கார்த்தி சிதம்பரம் 20.விஜய் வசந்த் 21. ஜே.எம் ஹாரூன்22. எஸ். பீட்டர் அல்போன்ஸ் 23. டாக்டர் நாசி ஜே. ராமச்சந்திரன் 24. ராஜேஷ் குமார் 25. சி.டி மெய்யப்பன் 26. பி. விஸ்வநாதன் 27. எம். கிறிஸ்டோபர் திலகர் 28. மயூரா எஸ்.ஜெயக்குமார் 29. மோகன் குமாரமங்கலம் 30. பிரவீன் சக்ரவர்த்தி 31. ஏ. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மற்றும் தலைவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், தலைவர், தமிழ்நாடு மாநில NSUI, தலைவர், தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ்,தலைமை அமைப்பாளர், தமிழ்நாடு மாநில சேவா தளம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது மொத்தமே கடந்த தேர்தலில் பத்து இடங்கள்தான் போட்டியிட்டோம் இதற்கு 35 பேர் கமிட்டியா, அதுவும் பாதிபேருக்கு மேல எழுபது வயதை தாண்டியவர்கள் என முணுமுணுக்கிறார்கள். அத்தோடு சிட்டிங் எம்.பிக்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.இந்நிலையில், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் தலைமையில் ஏற்கனவே 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, செல்லக்குமார். மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய்குமார், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். காங்கிரசுக்கு கடந்தமுறை ஒதுக்கிய தொகுதிகளில் 5 தொகுதிகளை மாற்ற திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று இக்கூட்டம் நடக்கிறது.எந்தெந்த தொகுதிகளை விட்டுக் கொடுப்பது, எந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அஜய்குமார் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்குபின், முதல்வர் ஸ்டாலினை, அஜய்குமார் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.