நாடாளுமன்ற தேர்தல் : பாஜகவும் குழு அமைத்தது !

0

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்து வருகின்றன. திமுக 4 கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. அதிமுக கூட்டணி குறித்து பேச குழு அமைத்து பல நாட்கள் ஆகிவிட்டது அங்கே கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பலக்கட்ட ரகசிய பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக தெரிகிறது.

logo right

இந்நிலையில் பாஜக சார்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த நேற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழக பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் அடங்கிய 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துவது, ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடும் பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் தற்பொழுதைய நிலையில் தமாகா (வாசன்), புதிய நீதிக்கட்சி (ஏ.சி.சண்முகம்), ஐஜேகே (பாரிவேந்தர்), தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான் பாண்டியன்) இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவனாதன்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை எப்படியும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது எப்படியோ தேர்தல் முடிவதற்குள் கூட்டணி அமைந்து வேட்பாளர்களை அறிவித்தால் சரிதான்.

Leave A Reply

Your email address will not be published.