நிம்மதி நிம்மதி சிவகார்த்திகேயன் ஹாப்பி !
வருமான வரித்துறைக்கு எதிராக, நடிகர் சிவகார்த்திகேயன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்துக்காக, ரூபாய் 15 கோடி சம்பளம் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 2018 ஜூலையில் ஒப்பந்தம் போட்டார். 2019 மே மாதம் படம் வெளியான நிலையில், சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019–20, 2020-21ம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை தனது வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்தது. அதை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, சிவகார்த்திகேயனுக்கும், ஞானவேல்ராஜாவிற்கும் இடையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. டிடிஎஸ் தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண் டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தார். தை பிறந்தது சிவ கார்த்திகேயனுக்கு வழி பிறந்திருக்கிறது, அவர் நடித்த நான்கு நாட்கள் முன்னாள் வெளிவந்த கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய அயலானும் அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்