நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அசத்தல் ஐடியா !!
என்னதான் ஒரு நிறுவனம் தரமான பொருட்களை கொடுத்து திறமையாக செயல்பட்டாலும் அவை மக்களை சென்றடைய விளம்பரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு விளம்பரம் மிகவும் முக்கியம் அது அம்பானியாகவும் இருந்தாலும் ஆச்சியாக இருந்தாலும் சரி ஆனால் அதில் மக்களை கவர்வதற்கு சிலர் கடைபிடிக்கு உத்திகள் தனித்துவமாக தெரியும், அப்படி ஒரு விளம்பரத்தை திருச்சியைச்சேர்ந்த ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனம் செய்திருக்கிறது இது மக்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது. சரி அப்படி என்னதான் செய்தார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வந்தால் நிறுவனங்கள் மாதாந்திர வருட நாட்காட்டியை வெளியிடுவது வழக்கமான நடைமுறை ஆனால் அதிலும் சற்றே புதுமை செய்தால் பேசப்படும் அல்லவா அப்படி ஒரு முயற்சியாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கவிஞர்களின் படத்தோடு அவர்களின் பாடல் வரிகளையும் எழுதி கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். பன்னிரெண்டு மாதத்திற்கும் பன்னிரெண்டு கவிஞர்களை கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ஜனவரிமாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீள்கிறது பட்டியல், அதில் அவர்களின் பிறந்த ஆண்டு இறந்த ஆண்டு ஒரு பாடல் என பக்காவாக திட்டமிட்டுள்ளார்கள் இது குறித்து அந்நிறுவனத்தின் முதலாளி கண்ணனை தொடர்பு கொண்டோம் சார் நிறுவனம் ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கான்செப்டை கருபொருளாக வைத்து இதனை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம் மக்களிடையே இதற்கு சரியான வரவேற்பு கிடைத்திருக்கிறது என்னங்க இந்த வருஷ காலண்டர் என்ன கான்செப்டுனு கேட்கிற அளவிற்கு பிரபலமாக இருக்கிறது, சூப்பர் சரி சார் அடுத்த வருஷ கான்செப்ட் என்ன என நாம் கேட்க சஸ்பென்ஸ் என்றார் ஒன்றை வார்த்தையில் சபாஷ் !