நிறைவேறுமா மக்களின் நீண்டநாள் ஆசை !

0

திருச்சி மாநகராட்சியின் 2024ம் ஆண்டுக்கான முதல் சாதாரண கூட்டம் ஜனவரி 2ம்தேதியன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் மேயர் அன்பழகன் திருபர்களிடம் கூறும்பொழுது, தமிழகத்தில் 21 மாராட்சிகளில் திருச்சி மாநகராட்சி சென்னைக்கு நிகரான மாநகராட்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது மாநகராட்சியுடன் மாநகரைச்சுற்றியுள்ள 3 ஊராட்சிகள் இணைய உள்ளன. அக்டோபர் மாதம் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும். இதன் முலம் மாநகராட்சி விரிவடைந்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் கிடைக்கும், பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் 3 மாதங்களில் திறக்கப்படும் அதே பகுதியில், தனியார் ஆம்னி பஸ் வந்து செல்ல 4 ஏக்கரில் ரூபாய் 18.75 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பஞ்சப்பூரில் கழிவுநீர் கத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பஞ்சப்பூரில் இருந்து குடமுருட்டி வரை, அல்லித்துறையில் இருந்து எம்.ஜி.ஆர் சிலை வரை 10 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ரூபாய் 150 கோடியில் செலவில் போடப்பட உள்ளது. தெப்பக்குளம் சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தி யானைக் குளத்தில் புதிய கடைகள் அமைத்து தரப்பட உள்ளது என்றார். ஆனால் மலைக்கோட்டை வாழ் மக்களோ எல்லாம் சரி திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு திருச்சியை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் அவ்வாறு மாற்றினால் மாநிலத்தில் உள்ள அனைவரும் பயன்பெருவார்கள், அதேபோல மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் பஞ்சப்பூரில் புதிய காவல்நிலையம் ஒன்றும் அமைக்க இருப்பதாகவும் அதற்கான கருத்துரு குறிப்பாணை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கதைக்கிறார்கள். ஆனால் காவிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வண்ணத்துபூச்சி பூங்கா முதல் கல்லணை வரை நகர எல்லை விரிந்துகொண்டே போகிறது. இந்தப்பகுதியில் இருந்துதான் அனைத்துவிதமான சரித்திர குற்றவாளிகளும் தங்கள் குற்ற சரித்திரத்தை தொடங்கியிருக்கிறார்கள். கஞ்சா விற்பனை மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து விட்டது என்பதோடு தற்பொழுதைய நிலையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா முதல் திருவளர்சோலைவரை ஒரே காவல்நிலையம் அதாவது ஸ்ரீரங்கம் காவல்நிலையம் மட்டுமே உள்ளது, அதைத்தாண்டி கல்லணை வரை மூன்று முக்கிய ஊர்களான பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சமயபுரம் காவல்நிலையம்தான் செல்ல வேண்டும் மேலும் திருவானைக்கோவிலில் மிகப்பெரிய சிவாலயமும் உள்ளது நகரமும் பெருகிக்கொண்டே போகிறது ஆகவே திருவானைக்கோவிலை தனியாக பிரித்து ஒரு காவல்நிலையம் தேவை என்பதே மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது நிறைவேறுமா மக்களி ஆசை ?

Leave A Reply

Your email address will not be published.