நீண்ண்ண்ண்ண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது !
திருவெறும்பூர் கடந்த 2011ம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது. அதுமுதல் திருவெறும்பூருக்கு என தனியாக தீயணைப்பு நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் திருவெறும்பூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என திருவெறும்பூர் பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் 1.81 கோடி மதிப்பீட்டில் திருவெறும்பூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன் அடிப்படையில் நேற்று காலை திருவெறும்பூர் பழைய ஒன்றிய வளாகத்திற்குள் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்தார், இவ்விழாவில் மத்திய மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் குமார், மாவட்ட அலுவலர் ஜெகதீசன், உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், சத்தியவர்த்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிய தீயணைப்பு நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது… தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 33 மாதங்கள் ஆகிறது தமிழக முதல்வர் 33 மாதம் தமிழக முன்னேற்ற மாதம் என்ற கூறுவார் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக இந்த தீயணைப்பு துறை உள்ளது சட்டமன்றத்தில் தீயணைப்பு நிலையம் திருவெறும்பூர் பகுதியில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் பேசிய பொழுது தான் திருவெறும்பூர் பெயர் சட்டமன்றத்தில் ஒலித்தது.
இது திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது கடந்த 2016ம் ஆண்டு நான் முதன் முதலில் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அரியமங்கலம் குப்பை கிடங்கு பேய் விபத்து நிகழும் போது தீ விபத்தை அணைப்பதற்காக வீரர்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து செயல்படுகின்றனர். அவர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றார். அப்படியே அடுத்த நீண்டநாள் கோரிக்கையான சர்வீஸ் ரோடு பிரச்சனைக்கும் தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்.