நேற்று.. இன்று.. நாளை ? கிலியில் முதலீட்டாளர்கள்…

0

நடப்பு நிதியாண்டில் 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. அவை மந்தமாக இருப்பதாக கருதப்படுவதால் 3வது காலாண்டில், ஐடி கம்பெனிகள் சிறப்பாக செயல்பட்டு, அதிக லாபம் சம்பாதித்துள்ளன என சிலர் கருதுகிறார்கள்.

இதன் விளைவாக, பங்குச்சந்தைகளில் ஐடி கம்பெனி பங்குகளின் விலை அதிகரித்து வந்தது. மும்பை பங்குச்சந்தையில் 15ம் தேதி திங்கள்கிழமை வர்த்தக நேரத்தில், 14 சதவிகிதம் வரை விப்ரோ பங்குகள் விலை உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக விப்ரோ பங்கு விலை 6.27 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. ஹெச்.சி.எல் பங்கு 3.08,இன்போசிஸ் பங்கு 2.43 சதவிகிதமும் உயர்ந்தன. டெக் மகிந்திரா, எல்டிஐஎம் பங்குகளும் விலை அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இதன்காரணமாக, மும்பை பங்குச்சந்தை பங்குவிலை குறியீடு சென்செக்ஸ் 760 புள்ளிகள் உயர்ந்தது, முதல்முறையாக 73 ஆயிரத்தை தாண்டி, திங்கள்கிழமை வர்த்தக முடிவில் 73 ஆயிரத்து 328 புள்ளிகளாக இருந்தது. இதே போல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து, முதல் முறையாக 22 ஆயிரத்தை தாண்டி, 22 ஆயிரத்து 97 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இதற்கிடையில், ஐடி கம்பெனிகள் பங்குகளின் விலை உயர்வால், பங்குச் சந்தையில் 5 நாட்களாக தொடர்ந்த சென்செக்ஸ், நிப்டி அதிகரிப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 199 புள்ளிகள் சரிந்து, 73 ஆயிரத்து 129 புள்ளிகளாக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந் தையில் நிப்டி 65 புள்ளிகள் சரிந்து, 22 ஆயிரத்து 32 புள்ளிகளாக நிறைவடைந்தது.

logo right

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் நிகர லாபம் ரூபாய் 16 ஆயிரத்து 372 கோடியாக 33 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. எனினும், வராக்கடன் 1.26 சதவீதமாக உயர்ந்திருப்பது, மொத்த கடன்கள் ரூபாய் 24.69 லட்சம் கோடியாக 62.4 சதவிகிதமாக அதிகரிப்பு, சில்லறை கடன்கள் 111 சதவிகிதம் உயர்வு, வட்டி வருவாய் குறைவு, வரிக்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் 8.44 சதவிகிதம் சரிந்தது பங்குச் சந்தையில் இந்த அதிருப்தி நேற்று காலை முதலீட்டாளர்கள் அதிகமாக விற்கத் தொடங்கினார். இதனால் எச்டிஎப்சி பங்கு விலை சரியத் தொடங்கியது. நேற்று மாலை 4 மணிக்கு எச்டி எப்சி பங்கு விலை ரூபாய் 141.66 குறைந்து, ஆயிரத்து 537 ரூபாய் 50 காசு என்ற அளவில் இருந்தது. இது 8.44 சதவிகித சரிவு ஆகும். கொரோனா தொற்று காலம் தொடக்கமான 2020 மார்ச் 23ம் தேதியில் எச்டிஎப்சி பங்கு விலை 12.7 சதவிகிதம் குறைந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. மேலும், பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் 4.09 சதவீதம், கோடக் வங்கி 3.70 சதவீதம், ஹிண் டால்கோ 3.34 சதவீதம் விலை சரிந்தன. விலை அதிகரித்த பங்குகளில், ஹெச்.சி.எல் டெக் 1.32 சத விகிதம், எஸ்பிஐ லைப் 0.88 சதவிகிதம், டிசிஎஸ் 0.61 சதவிகிதம் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் ஆயிரத்து 628 புள்ளிகள் சரிந்து, 71 ஆயிரத்து 501 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 460 புள்ளிகள் சரிந்து, 21 ஆயிரத்து 572 புள்ளிகளாக நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் வெளி யிடப்பட்டுள்ள கம்பெனிகளின் பங்குகள் மொத்த மதிப்பு ரூபாய் 4.22 லட்சம் கோடி குறைந்தது. பங்குச் சந்தைகளில் பங்குவிலை குறியீட்டு எண் சரிவுக்கு, நாணயச்சந்தையில் எல்லா நாட்டு கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு உயர்வு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியும் காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்நிலையில் காலையில் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்சியே காணப்பட்டது தற்பொழுதைய நிலவரப்படி மும்பை சென்செக்ஸ் 222 புள்ளிகள் குறைந்தும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.