நேற்று காங்கிரஸ் இன்று திமுக…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகள் கூட்டணிப்பேச்சு வார்த்தை நடத்த குழுக்களை அமைத்து வருகிறது, நேற்றைய தினம் காங்கிரஸ் 35 பேர் கொண்ட பட்டியலை அறிவித்த நிலையில் இன்று திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளத்து.
தொகுதி உடன்பாடு சம்மந்தமாக பேச்சு வார்த்தை நடத்திட தலைவராக டி.ஆர்.பாலுவும், குழுவின் உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, பதவி நீக்கம் செய்யப்பட்ட க.பொன்முடி, ஆ.ராசா எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதே போல் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், கோவி. செழியன், ராஜேஷ்குமார், எழிலரசன், அப்துல்லா, எழிலன், மேயர் பிரியா குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்தமுறை கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் மட்டுமே இடம்பெறுமா அல்லது மேலும் சில கட்சிகள் இணையுமா என்பதை பேச்சுவார்த்தைக்குழுதான் முடிவு செய்யும்.