பக்தர்களின் நலனுக்காக பச்சைப் பட்டினி விரதம்… சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…
மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி , பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் சமயபுரத்தில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் உலகப்பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இங்கு அம்மன் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்பங்களாக திருமேனியில் தரிசித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பான விழாக்களில் பூச்செரிதல் விழாவும் ஒன்றாகும். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நலனுக்காகவும் சமயபுரம் மாரியம்மனே பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பு. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு பூச்சொரிதல் விழா துவங்கியது.
நேற்று தொடங்கிய முதல் பூச்சொரிதல் விழாவில் இதில் கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அம்மனுக்கு கூடை கூடையாக பூக்களை சாத்தினர்.