பங்குச்சந்தை பாலபாடம்..

0

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மேல் எனும் சொலவடை வழக்கத்தில் இருப்பது போல பங்குச்சந்தைகளில் எப்படிப்பட்ட பங்குகளை தேர்தெடுக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் உங்களின் முதலீடு மோசமாகாதுங்க… முதலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கண்ணில் தென்படும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை கணக்கில் கொள்ள வேண்டும் உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்வீர்கள் பல் துலக்குவீர்கள் அதற்கு என்ன தேவைப்படும் பேஸ்ட் பிரஷ் ஓகேவா அதன்பின் காஃபியோ டியோ பருகுவீர்கள் அல்லவா அதற்கு பயன்படுத்தும் பொருட்கள் அதன் பின்னர் நாளிதழை கையில் எடுப்பீர்கள் ஒரு குளியல் போட சோப்பை எடுப்பீர்கள் இப்படி காலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தை பட்டியல் இடுங்கள். அடுத்ததாக உடுத்தும் உடை அலுவலகம் செல்ல எந்த வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள் உங்கள் கண்களில் தென்படும் வாகனங்கள் எவை எவை எனக்கணக்கில் கொள்ளுங்கள், அலுவலகத்தில் பணியாற்றுகிறீர்கள் அல்லவா அங்கே பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்னென்ன என கணக்கில் கொள்ளுங்கள் மாதாமாதம் சம்பளம் வருகிறதல்லவா அப்படினா எந்த வங்கினு பாருங்கள் இப்படி பட்டியல் இட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக காசு பார்க்கலாம் அடுத்ததாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் உங்களுக்கு தேவையில்லாத அதாவது உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீட்டுக்கு பயன்படுத்த வேண்டும், உங்கள் முதலீடானது நீண்டகால அடிப்படையில் இருக்க வேண்டும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும் டிரேடிங் என்பது கூடவே கூடாது ஏனெனில் நமது நேரம் விரயமாவதுடன் மன உலைச்சலுக்கும் வழி வகுக்கும். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நூறு பன்றிகளை வளர்ப்பதைவிட ஐந்து யானைகளை வளர்ப்பது மேல் என்பதைப்போல உங்கள் போர்ட்போலியோவில் மிகச்சிறந்த பங்குகளை தொடர்ந்து வாங்கிச்சேர்ப்பதுதான் பெருமை, பத்தே பத்தாக இருந்தாலும் அதுதான் உங்களுக்கு கெத்து ! ஆக வீட்டு உபயோகப்பொருட்கள், வாகனம், மென் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் வங்கி மொத்தம் இப்பொழுது உங்கள் கையில் நான்கு துறை பங்குகள் உள்ளன அந்த நான்கு துறை பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே வாருங்கள். அதெல்லாம் சரிங்க எப்பதான் வெளியே வருவது எனதானே கேட்கிறீர்க்ள் உங்கள் மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு அல்லது கல்யாண செலவுவரை எடுக்காதீர்கள் இந்த நான்கு துறையும் உலகம் உள்ளவரை உயிப்புடனே இருக்கும் கையைக்கடிக்காது பத்தாண்டுகள் கழித்து நீங்கள் உங்களையே பார்த்து மலைத்துப்போவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.