பத்திரிக்கையாளருக்கு உயரிய பாரத் ரத்னா விருது !!

0

நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்தவர்களை கெளரவிக்கும் வகையில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. பீகார் முன்னாள் முதல்வர் மறைந்த கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது கடந்த 24ம்தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு (96) பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது.முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது தொடர்பாக கொள்கைக்கு கிடைத்த விருது என அகம் மகிழ்ந்திருக்கிறார் அத்வானி.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து அத்வானி கூறியது… எனக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதை, மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இது ஒரு நபராக, எனக்கு கிடைத்த கவுரவமாக கருதவில்லை. நான் எந்த கொள்கைக்காக லட்சியங்களுக்காக வாழ்நாள் முழுவதும், என்னால் முடிந்தவரை சேவை செய்தேனோ அந்த கொள்கை, லட்சியங்களுக்கான கவுரவமாக கருதுகிறேன். 14 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தேன். அப்போது, முதல், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் நான் எதிர்பார்த்த விருதாக இருந்தது. எனக்கு என்ன பணி கொடுத்தாலும், அதை நாட்டுக்காக முழு மனதுடன் செய்தேன். நான் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற் றிய, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய், பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாய் ஆகியோரை இந்த நேரத்தில் நினைவு கூருகிறேன்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்களுக்கு நன்றி இவ்வாறு அத்வானி கூறினார். பாரத ரத்னா விருது பெறும் அத்வானி, 1927ம் ஆண்டு நவம்பர் 8ம்தேதி, இப்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், சித்தி குடும்பத்தில் பிறந்தார். 1942ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார் 1947ல் தேச பிரிவினைக்கு பின், கராச்சியில் இருந்து வெளியேறி டில்லி வந்தார்.

logo right

1947- 51ம் ஆண்டுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் முழு நேர ஊழியராக (பிரசாரக்) பணியாற்றினார். பின்னர் ஜனசங்கத்தில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு உதவி செய்ய டில்லிக்கு 1957ல் வந்தார். 1958 – 63 வரை டில்லி பகுதி ஜனசங்க செயலாளராக இருந்தார். 1960 – 67 வரை ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.

கமலா என்பவரை 1965ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெயந்த் என்ற மகனும், பிரதிபா என்ற மகளும் உள்ளனர். அத்வானி 1970ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம் பியானார். 1972ல் பாஜவின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். 1975ல் நாட்டில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டபோது பெங்களூர் மத்திய சிறையில், 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.

1977 – 79 வரை மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் இருந்த ஜனதா கட்சி ஆட்சியில், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச் சராக பணியாற்றினார். 1980ல் பாஜகவை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்த அத்வானி, அதன் பொதுச் செயலாளராக 1986ம் ஆண்டு வரை இருந்தார். 1986ல் பாஜக தலைவராக பொறுப்பேற்ற அத்வானி, 1988ல் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு 1990ல் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியது.1991 – 93 எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 1993 – 1998 வரை பாஜக தலைவராக இருந்தார். 1998 – 2004 வரை மத்தியில் வாஜ்பாய் தலைமையில் இருந்த அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். இதில் 2002 – 04 வரை துணை பிரதமராகவும் இருந்தார்.

2004 – 14 வரை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2014 – 19 வரை குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதி லோக்சபா எம்பியாக இருந்தார். 1970 & 1989ல் ராஜ்யசபா எம்பியாகவும், 1989. 91, 1991 – 96, 1998 – 2019 வரை லோக்சபா எம்பியாகவும் அத்வானி இருந்துள்ளார். இதுவரை 49 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. 50வது நபராக முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு !.

Leave A Reply

Your email address will not be published.