பல்லடம் பகீர்… அச்சத்தில் அதிமுக !!
பல்லடம் தொகுதியில் பிப்ரவரி 22ம் தேதி நடைபயண நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பிர தமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி பிப்ரவரி 28ம் தேதி நடக்க இருக்கிறது, இதை மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
நடை பயணம் தொடங்கும்போது, கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதேபோல், நிறைவு விழாவிலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாஜக கூட்டணி வலிமையானதாக மட்டுமல்லாமல், வெற்றி பெறுவதாகவும் இருக்கும். பாஜக கூட்டணியின் கதவுகள் மட்டுமின்றி, ஜன்னல்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை ஏற்பவர்கள் எல்லாரும் கூட்டணிக்கு வரலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின்னர், தமிழகத்தில் 2வது, 3வது இடத்துக்கு முக்கிய போட்டி நடக்கிறது. இரண்டொரு நாளில் பாஜவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக் கிய புள்ளிகள் இணைய இருக்கின் றனர். குறிப்பாக, மக்கள் அதிகாரம் கொடுத்திருக்கும் முக்கிய புள்ளிகளாக இருப்பார்களையும் வருபவர்களையும் பாஜக ஏற்றுக் கொள்கிறது.
எதிர்காலத்தில் நிறைய கட்சிகளின் இணைப் புகள் நடக்கும். பாஜவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். சிறந்த எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது. சட்டசபையில் பேச பாஜக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. சட்டசபையில் அமைச்சர்கள் பதில் கூறுவதற்கு முன்னதாக, சபாநாயகர் பதிலளிக்கிறார்.
சபாநாயகர் நடுநிலையாக செயல்படுகிறரா என்பது தெரியவில்லை, ரவுடி பட்டியலில் இருப்பவர்களே பாஜகவில் சேருகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். அவரும் ரவுடிப் பட்டியலில் இருப்பவரே. வேறு கட்சியில் அவர் இருந்தபோது, காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றம் சாட் டப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். ஆக பல்லடத்தில் பகீர் காத்திருக்கிறதா இல்லை புஸ்வானமா என்பது 22ம்தேதி தெரிந்துவிடும்.