பழனியில் ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனை நிகழ்ச்சி !

0

திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை அடிவாரத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக குழந்தைகளின் நடன நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஐந்து வயது முதல் 50 வயது வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.

நடன நாட்டிய நிகழ்ச்சிக்காக சென்னை , பெங்களூர் ,திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து நடன கலைஞர்கள் பழனிக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

logo right

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாட்டியம் ஆடுவதற்கு தகுந்தாற்போல் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து நடனம் ஆடினர். முருகனைப் போற்றி எழுதப்பட்ட பாடல்கள் ஆன பழனி திருப்புகழ், காவடி சிந்து, சுப்ரபாதம் ஆகியவை 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக குழந்தைகளால் நடனம் ஆடினார்கள்.

இதுவரை நடன நாட்டியத்தோடு காவடியையும் இணைத்து ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது இதுவே முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சியை விர்ஷா உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் செய்து சான்றிதழை வழங்கியது. விர்ஷா உலக சாதனை அமைப்பு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்சிகளை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. நடன நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.