பழனி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 28ம் தேதி மாசித்தேரோட்டம் !!

0

பழனி நகர மக்களின் பிரதானமாக கோயிலாக வழிபடப்படுவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான இக்கோயிலில் மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடந்தேறியது. இரவு கோயில் வளாகம் அருகே நடப்பட்ட முகூர்த்தக்கம்பத்துக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. முகூர்த்தக்காலுக்கு வேண்டிய புண்யாவாஜன பொருட்கள் இடப்பட்டதும் தீபாராதனை நடைபெற்றது.

logo right

வரும் பிப்ரவரி 13ம் தேதி மாலை அரிவாள் எடுத்துக் கொடுத்தலும், இரவு 8 மணியளவில் திருக்கம்பம் அலங்கரித்தல் மற்றும் கம்பம் சாட்டுதலும் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் பிப்ரவரி 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு நடைபெறுகிறது.

கொடியேற்றம் துவங்கியது முதல் 10 நாட்களுக்கும் அருள்மிகு மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருள்கிறார். பிப்ரவரி 27ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 28ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊரின் முக்கிய பிரமுகர்களும் கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.