பழனி திருவண்ணாமலை கொட்டுது பக்தர்கள் காணிக்கை !!

0

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து 1ம் தேதி ,4 ம் தேதி ,5 ம் தேதி என கடந்த மூன்று நாட்களாக எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் முடிவில் ரொக்கம் ரூபாய் 6கோடியே 84 இலட்சத்து 59ஆயிரத்து 013 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 2334 கிராமும், வெள்ளி 57,339 ( 57 கிலோ) கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2097ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, என பலர் பங்கேற்றனர்.அதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மாசி மாதம் பௌர்ணமி உண்டியல் வருவாய் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாசி மாதம் பௌர்ணமி முடிந்து நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தது.அண்ணாமலையார் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணியில் மாசி மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் செலுத்த காணிக்கையாக 2 கோடியே 43 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் 544 ரூபாயும் தங்கம் 165 கிராம் மற்றும் வெள்ளி 1060 கிலோ கிராம் என பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.