பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் அரோகரா ! அரோகரா !!

0

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக பிரசாதங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் என காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான பாதுகாப்பு குழுவினர் அனைத்து கடைகள் மற்றும் தேவஸ்தான பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு செய்த பிரசாதங்களை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

logo right

இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகமானது தைப்பூசத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் ஆகையால் அதிகாவில் பஞ்சாமிர்த தயாரிப்பு செய்து வைத்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தும் பஞ்சாமிர்த விற்பனை அதிகளவில் ஆகாததால் பஞ்சாமிர்தம் தேக்கம் அடைந்து விட்டதாகவும், இதனால் விற்பனை செய்யப்பட்ட சில பிரசாதங்களில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழநி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 80,000 மேற்பட்ட பஞ்சாமிர்த டப்பாக்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இவர்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தேவஸ்தான பஞ்சாமிர்த்தத்தைவிட தனியார் கடைகளுக்குதான் கிராக்கி என்ற நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சைக்கு கோவில் நிர்வாகம் பதில் அளிக்காதது மேலும் பக்தர்கள் இடையே ஐயத்தை அதிகரிக்க செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.