பழனி : 99.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கம் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்

0

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க மேம்படுத்த அரசு பெருந்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

பழனி கோயிலில் வின்ஜ் நிலையம் புகார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், இடும்பன் குளத்தில் புதிய முடி கொட்டகை மண்டபம், பஞ்சாமிர்த விற்பனை நிலைய கட்டிடம், இடும்பன் மலைக்கோயில் பராமரிப்பு பணி, பேருந்து நிலையம் ,ரயில் நிலையத்தில் அலங்கார வளைவு என 12 பணிகள் 99.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டத்திற்குரிய வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பணிகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.

logo right

மலையடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மகளிர் கலைக் கல்லூரியில் 6.83 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், ஆய்வகம், நூலகம் கட்டுவதற்கான பணியையும் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, ராஜசேகர், மணிமாறன், பழனி கோயில் இணை ஆணையர் பாரதி, உதவியாளர் லட்சுமி மற்றும் கோயில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், பழனி முருகன் கோவிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே ரோப்கார் திட்டத்தை கைவிட்டு புதிதாக திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என கூறினார்.

மேலும் பழனி கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படவில்லை என பதில் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.