பாஜகவிற்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு !

0

நடைபெறவிருக்கின்ற 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக தமிழர் தேசம் கட்சிக்கு பாஜக தலைமையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதையொட்டி, நேற்று (12.03.2024) சமநீதி போராளி தலைமையில் நடைபெற்ற அவசர நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1.சுதந்திர இந்தியாவின் 76 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒருவர் கூட முத்தரையர் சமுதாயத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்கிற சமூக அநீதியைத் துடைத்தெறியும் பொருட்டு தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கிட வலியுறுத்துவது எனவும்

logo right

2.அடுத்து வருகின்ற (2026) சட்டமன்றத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சிக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளை ஒதுக்கித்தர முடிவெடுக்கப்பட்டது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செல்வகுமார் தலைமையிலான வீர முத்தரையர் சங்கம், தமிழர் தேசம் கட்சி எனப்பெயர் மாற்றப்பட்டது, இச்சமூகத்தை சார்ந்தவர்களுக்கு பெரம்பலூர் 21 சதவிகிதம், திருச்சியில் 15 சதவிகிதம்,சிவகங்கையில் 19 சதவிகிதம், தஞ்சையில் 16 சதவிகிதம், விருதுநகரில் 6 சதவிகிதம், கரூரில் 10 சதவிகிதமும் ராமநாதபுரத்தில் 7 சதவிகிதமமும் மதுரையில் 6 சதவிகிதமும் வாழ்கிறார்கள். என்கிறார்கள் முத்தரையர்கள் இதற்குமுன் அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.