பாஜக அமமுக கூட்டணி உறுதி – டிடிவி தினகரன் திருப்தி !
பாஜகவுடன் மூன்று மாதமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கோரிக்கைகள் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்து விட்டோம். தாமரை சின்னத்தில் அமமுகவை நிற்க சொல்லவில்லை பொய் செய்தி என்றார். யாரும் நிர்பந்திக்கவில்லை. பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும். மோடி தான் பிரதமராவது உறுதி அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டார்.
எத்தனை சீட்டு, எத்தனை தொகுதி என்பது எங்கள் கூட்டணியில் நிர்பந்தம் கிடையாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினோம். பாஜக ஒரு மத சார்புள்ள கட்சியா என்ற கேள்விக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காக இந்த காலகட்டத்தில் பாஜக தேவையான ஒரு கட்சி தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தின் உரிமையை காக்கவும் தொடர்ந்து எங்கள் கட்சி குரல் கொடுக்கும்.
அதே நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தில் இது தேவையான அனைத்து உரிமைகளையும் கேட்டு பெற தயங்க மாட்டோம் தனிப்பட்ட முறையில் எனக்கும் எடப்பாடிக்கும் எந்தவித கருத்து வேறுபடும் இல்லை.கொடுக்ககல் வாங்கல் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் சுயநல நோக்கம் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார் ஒருவேளை அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து அந்த தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வீர்களா என்பதற்கு மீண்டும் உங்களை சந்திக்கும் பொழுது பதில் தெரிவிக்கிறேன். என்றவர்
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை அனைவரும் விமர்சிக்கிறார்கள் தகுதிக்கு மீறி மரியாதையாக பேசுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள் உங்களிடம் எப்படி அவர் நடந்து கொள்கிறார் என்ற கேள்விக்கு என்னோடு அவர் பழகும் வரை நல்ல படித்த அதிகாரியாக செயல்பட்டவர் நல்ல புத்திசாலியா இருக்கிறவர் அவர் என்னோடு பிடித்த நண்பராக இருக்கிறார் நட்போடு பழகக் கூடியவர் பிடித்த நல்ல நண்பர். பேட்டியின் பொழுது முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான் , ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.