பாஜக கூட்டணியில் அஇசமக சித்தியுடன் சந்தித்து ஆதரவு !

0

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு திசைகள் போல நான்கு கூட்டணியாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ளப்போகின்றன தமிழக காட்சிகள் இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியவற்றிற்கு இன்னும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை

அதிமுக அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டது நேற்று முன் தினம் புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடந்து முடிந்த நிலையில் நேற்று தேமுதிகவுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியிருக்கிறார்கள் அதே கூட்டணியில் வாலண்டிரியாக வண்டியில் ஏறிக்கொண்டிருக்கிறது பார்வேர்ட் பிளாக்

logo right

பாஜகவின் கூட்டணியில் தமாகா ஐஜேகே புதிய நீதிக்கட்சி இன்னும் சில உதிரிக்கட்சிகள் பேச்சு வார்த்தையை முடித்து ஃபைலை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு பறந்துவிட்டார் அதன் தமிழக தலைவர் அண்ணாமலை

நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் போல தனியாக களம் காண்கிறது, இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.அதிமுக கூட்டணியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு அடி போட்டது ஆனால் சாதகமான பதில் வரதா காரணத்தால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் போட்டியிடுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் மோடியின் ஆட்சியை மீண்டும் அமைக்க பாடுபடப்போவதாக கூறி நேற்று இணைந்து விட்டார் அனேகமாக நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக சரத்குமார் போட்டியிடுவார் என்கிறார்கள்.

எனவே நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டதாகவே கருதுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள் நாடார் சமுதாய மக்கள் அதிகமுள்ள நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சிகளும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களையே வேட்பாளராக அறிவிக்கும் என்பதே ’அரசியல் கணக்கு’ தேர்தலின் முடிவில் தெரியும் யாருக்கு அல்வா என்பது !.

Leave A Reply

Your email address will not be published.