பாஜக தலைவர் அழைக்கிறார் !பல்லடத்துக்கு வாங்க…
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார், அதில், அவர் கூறியிருப்பதாவது… சகோதர, தகோதரிகளே, என் மண் என் மக்கள் யாத்திரை, இன்றோடு (நேற்று) 232 தொகுதிகளை கடந்துள்ளோம். சற்று நேரத்துக்கு (நேற்று) முன்பு 232வது தொகுதியாக மதுராந்த கத்தை கடந்துவிட்டு, நாளை மறுநாள் (நாளை) திருப்பூரில் 233, 234வது தொகுதியை கடக்க உள்ளோம்
. கடுமையான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை பெரும் திரளாக நம்பிக்கை கொடுத்து என்னுடன் வந்து, மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். தமிழகத்தில் இத்தனை காலமாக நாம் எதிர்பார்த்திருக்கும் மாற்றம் நிச்சயம், நாடாளுமன்ற தேர்தலில் நடக்கப் போவது தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது.
மோடியின் சிறப்பான ஆட்சி, தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு, தமிழக மக்களின் நேர்மையான அரசியலுக்கான ஏக்கம் ஆகிய மூன்றும் 2024ல் நமக்கு வெற்றியைக் காட்டும்.
ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர் கள், பார்க்க முடியாமல் தவறவிட்டவர்கள் எல்லோரும், 27ம் தேதி பல்லடத்தில் மதியம் 12 மணிக்கு நடக்கும் நிறைவு நிகழ்ச்சிக்கு வரவேண்டும். இது, உங்கள் விழா. நாளை நமதே என்ற நம்பிக்கையை கொடுக்கப்போகும் வெற்றி விழா. என் தனிப்பட்ட அழைப்பாக எடுத்துக்கொண்டு, பல்லடத்துக்கு வாருங்கள். மோடிக்கு ஆசீர்வாதம் வழங்குங்கள். என இவ்வாறு வீடியோ வெளியிட்டு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.