பாஜக தேர்தல் அறிக்கைக்குழு வருகை உங்கள் கருத்தை சொல்லுங்கோ…
திமுக., அதிமுக., உள்ளிட்ட கட்சிகள், மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்த கருத்துக்களை, கேட்க முன்பே ஆரம்பித்துவிட்டன இந்நிலையில் பாஜகவும் ஆலோசனைகளைக் கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், முன்னாள் எம்பிக்கள் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, இன்று முதல் முதல் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு நடத்துகிறது. முதல்கட்டமாக, விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 10.30 தொழில், வர்த்தகம் மற்றும் சேவை துறையினரோடு கருத்து கேட்பு நடக்கிறது. பொதுமக்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என்று எல்லாரும் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தொடர்ந்து விவசாயம் சம்பந்தமான கருத்துகளைக்கேட்பதற்காக திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் இன்று மாலை 4 மணிக்கு பாஜக கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.