பாடாய் படுத்தும் சாலை பதைபதைப்பில் பழனி மக்கள் !
பழனி அடுத்த புது ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று நாட்களாக குளம்போல் அப்பகுதி தேங்கி காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தணணீர் பொதுமக்கள் மீது சேற்று நீருடன் தெளிப்பதால் பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் மனு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ரஞ்சித் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாலையில் குளம் போல் தண்ணீர் காணப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக நாற்று நடும் இப்போராட்டம் நடைபெற்றது. தண்ணீரில் நாற்றுகளை நட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.