பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரேக்ளா பந்தயம் போலீசார் அனுமதி மறுப்பு போராட்டம் கைது…

0

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே முத்தனம் பட்டி கிராமத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி ஜனதா கட்சியின் சார்பில் ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற இருந்தது இதற்காக முத்தனம் பட்டியில் ரேக்ளா ரேஸ் பந்தயத்தை பொதுமக்கள்கான பார்வையாளர்கள் ஸ்டேடியம், சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைப்பது, என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

logo right

அப்போது அங்கு வந்த போலீசார் பல்வேறு காரணங்கள் கூறி ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என கூறினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி தர வேண்டும் என கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.