பிரதமர் ஸ்ரீரங்கம் வருகை : ட்ரோன்கள் பறக்க தடை..
பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு இன்று முதல், 20ம் தேதி வரை திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி திருச்சி மாவட்டத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மாநகர எல்லைக்குள் 18ம் தேதி முதல் 20ம் தேதிவரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.