பிரமலதாவிற்கு ’பிரேமம்’ அதிமுகவா பாஜகவா ?
தேமுதிக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலு வலகத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் பேசும் பொழுது…தேர்தல் அரசியலில் கட்சிகள் கூட்டணி வைப்பது இயற்கை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தனர். தேமுதிக சார்பில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தை குழு, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் ராஜ்ய சபா எம்பிக்கள் உள்ளனர்.
அதனால் ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும் என்று எங்கள் உரிமையை கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளனர்.பாஜகவுடன் நாங்கள் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜகவினர், எங்களுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். எங்களின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஒருவார காலத்துக்குள் தெரிவிக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் எப்போதும் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். அவர்கள் ஆட்சி என்பதால் அப்படித்தான் கூறுவார்கள். இந்த ஆட்சி சிறந்த ஆட்சி என் பதை மக்கள் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் தற்பெருமை பேசக்கூடாது எனத்தெரிவித்தார்.
ஆனால் இரண்டு ஆப்ஷன் இவர்களுக்கு இருக்கிறது ஒன்று அதிமுக மற்றொன்று பாஜக ஆனால் தொண்டர்கள் திமுகவுடன் மட்டும் கூட்டணி கூடவே கூடாது என எடுத்துக்கூறியுள்ளனராம் ஆகவே ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன்தான் கூட்டணி அதற்கு இன்னும் தமிழகத்தை பொறுத்தவரை 18 மாதங்கள் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம் ராஜ்ய சபா கிடைக்கிறதா என்று வேற என்னத்த சொல்ல !.