பிரிக்க முடியாதது எதுவோ வரிசை கட்டும் வாரிசுகள் !
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் கருணாநிதி மகள் கனிமொழி (துாத்துக் குடி), துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் (வேலுார்), மாறன் மகன் தயாநிதி (மத்திய சென்னை), பொன்முடி மகன் கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி (வட சென்னை), தங்க பாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண் டியன் (தென்சென்னை) என வாரிசுள் 6 பேருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் விமர்சனங்களை தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திமுக தரப்பில் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல வாரிசுகள் வரும் தேர்தலில் களம் காண இருக்கிறார்கள், அமைச் சர் எ.வ. வேலு மகன் கம்பன் (திருவண்ணாமலை), அமைச் சர் நேரு மகன் அருண் நேரு (பெரம்பலுார்), சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு (திருநெல்வேலி) ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக அறிவாலய பட்சிகள் சொல்கின்றன.
இவர்க கலாநிதி, கம்பன், அருண்நேரு ஆகியோர் இளைஞர் அணி ஒதுக்கீட்டில் உதயநிதி பரிந்துரையில் இடம் பிடிக்கிறார்களாம், திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களமி றங்குகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் வாரிசு களாக இருப்பார்கள் என்பது கட்சியினரிடையே கவனத்தை கவர்ந்திருக்கிறது.