பீகேர் ’புல்’ : இரண்டு நாட்கள் டாஸ்மாக் தொடர் விடுமுறை !
தமிழகத்தில் பிரிக்க முடியாதது எதுவோ எனக்கேட்டால் மதுக்கடையும் மதுப்பிரியர்களும் எனக்கூறிவிடலாம் அவர்களை உஷார் படுத்தவே இந்த செய்தி… தொடர்ந்து இரு நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை வருகிறது 25ம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டும் 26ம் தேதி குடியரசு தினமும் வருவதால் அனைத்து விதமான மதுபானக்கடைகளும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் ஆகவே இப்பவே உஷார் பண்ணிக்கங்க.
ஏற்கனவே இம்மாதம் 16ம்தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகவே இம்மாதம் மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதை மனதில் கொள்ளவும்.
வடமாநிலங்களில் பலவற்றில் இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.