புல்லட் வைத்தியர்.. வெங்கடேசன் !

0

ஏங்க இங்கே புல்லட் மெக்கானிக் வெங்கடேசன் கடை எங்க இருக்குங்க இந்த வார்த்தை திருச்சி டோல்கேட்டில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு வார்த்தை, லால்குடி ரோட்டுல நேரா போங்க ஆங்கரைனு போர்ட் வரும் அதுல இருந்து பத்தடி அய்யர்கடைனு கேளுங்க சொல்வாங்க… ஆம் வெங்கடேசன் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக புல்லட் மெக்கானிக்காக இருக்கிறார், இப்பொழுது அவருக்கு 58 வயது, அப்படியா 8 வயசுலயே மெக்கானிக்கா ஒரு ஆர்வம் பீறிட்டு எழ நம்ம வண்டிய ஆங்கரை நோக்கி திருப்பினோம் மெயின் ரோட்டிலேயே கடை இங்க வெங்கடேசன் நான் தாங்க, புல்லட்டைத்தவிர வேற எந்த வண்டியும் பார்க்க மாட்டேன் நீங்க இன்னொரு பத்து கடை தாண்டி போங்க அங்கே ஒரு டூவீலர் மெக்கானிக் இருக்காரு பாருங்க.. நாங்க உங்களதான் பார்க்க வந்தோம் சொல்லுங்க, அதென்ன புல்லட் மட்டுமே, ஓ என்னோட கதைய கேட்க வந்திங்களா நாலாவது படிச்சுகிட்டு இருந்தேன், வாத்தியார் அடிச்சுப்புட்டார், பின்னங்கால் பிடறியில பட ஓட்டமெடுத்தேன் எங்க மாமா புல்லட் மெக்கானிக் அதனால அவரு கடையில வந்து சேர்ந்துட்டேன், விளையாட்டா ஐம்பது வருஷம் ஓடிப்போயிடுச்சு சரி நமக்கு இதுதான் தலையில் எழுதியிருக்குனு அப்ப பிடிச்ச ஸ்பேனர்தான் இன்னைக்கு வரைக்கும் சோறு போட்டுகிட்டு இருக்கு தமிழகத்தோட மத்தியில ஊரு இருக்குறது ஒரு வசதி கன்யாகுமரில இருந்து சென்னை வரை அனைத்து பகுதியில இருக்குற அத்தனை புல்லட் காதலர்களுக்கும் நாமதான் டாக்டர் அதாங்க மெக்கானிக், மிகப்பெரிய பிரபலங்கள் முதல் விவசாயிகள் வரை நம்மளோட கஸ்டமர்ஸ்தாங்க ஒரு முறை வந்துட்டாங்கனா மனசு திருப்தியோட போவாங்க அவங்க சொல்லி சொல்லி அப்படியே வளர்ந்துட்டேன். சரி இப்ப வந்திருக்குற புல்லட் பெஸ்டா பழைய புல்லட் பெஸ்டா, கிக் ஸ்டாட்டர்ல இருக்குற கிக் வராதுங்க நாலாவது கியர்லயும் அந்த லிவரை பட்டுனு ஒரு தட்டு தட்டி நியூட்ரல் பண்ணிட்டு ஸ்டாண்ட போட்ட அவ்வளவு கெத்து ! பழைய புல்லட்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் இன்னும் கிடைக்குதா முழுசா கிடைக்காது ஒரு 70 சதவிகிதம் கிடைக்குது கிடைக்காதத நானே லேத்துக்கு போய் சொல்லி செஞ்சுகிட்டு வந்து மாட்டிடுவேன் க்ரோமியம் தவிர மற்ற எல்லாமே நமாளே செய்யறதால கஸ்டமர்களுக்கு பரம திருப்தி ஐம்பது வருஷமா எப்படிங்க ஒரே தொழில அதுவும் புல்லட் மட்டும் காதல்தாங்க , இன்னு ஒண்ணு தெரியுமா கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரிஞ்ச தொழில விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்னு நமக்கு தெரிஞ்ச தொழிலை காதலோட ரசிச்சு செஞ்சா வெற்றிதாங்க. வாழ்த்துக்கள் கூறிவிட்டு விடைபெற்றோம்.

Leave A Reply

Your email address will not be published.