பூங்குன்றனின் பொளேர் பதிவு…பாஜகவில் இணைகிறாரா ?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தன் கட்சியையும் தேசிய கட்சியில் கலக்க வைத்திருக்கிறார். நீண்டு யோசித்து, நிரம்ப சிந்தித்து நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறார் என்றே என் மனம் நினைக்கிறது. அன்புச் சகோதரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றே நினைக்கிறேன். இந்த வயதில் இந்த முடிவு அவருக்கு தேவைப்படுவதாகவே தோன்றுகிறது.
தேர்தல் நேரங்களில் தோழமை கொண்டிருந்த கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். திறமை வாய்ந்தவர். நல்லதொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அழகாக பேசக்கூடியவர். அவருக்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை. ஏற்கனவே அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் ஆளுநராக இருக்கிறார். தற்போது சரத்குமார் அவர்களும் இணைந்திருப்பது நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இனி அவர் தன்னுள் மாற்றத்தை அனுமதிக்கக் கூடாது.
அன்பிற்கினிய சகோதரர் சரத்குமார் அவர்கள் தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தன்னை நம்பி இத்தனை ஆண்டுகள் உடன் பயணித்தவர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படியாக ஒரு பதிவை இட்டு இருக்கிறார் அவரை தொடர்புகொள்ள முயன்றோம் முடியவில்லை அவர் பாஜகவில் தன்னை விரைவில் இணைத்துக்கொள்ளப்போகிறார் என்கிறார்கள் அவரைப்பற்றி விபரம் அறிந்தவர்கள்.