பைரி வெறும் புறா சண்டை இல்லை; மனிதர்களின் உணர்வுகளைப் பேசுகிறது – யாத்திசை இயக்குநர்
பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசும் போது…பைரி என்பது ஒரு வகை கழுகு இனம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம் தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களன் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குறும்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே கேமராமேன் வசந்த் அவர்கள் எனக்குப் பழக்கம். என் குறும்படத்திலேயே உழைப்பைக் கொட்டி வேலை செய்திருப்பார்.
நடிகர் கார்த்திக் பிரசன்னா பேசும் போது.. இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் ஜான் அவர்களுக்கு நன்றி. ஒரு நடிப்பு கல்லூரியில் 100 நாட்கள் பாடம் படித்த அனுபவம் கிடைத்தது. சக்திவேலன் சார் அவர்களுக்கு நன்றி. அவருக்கு சினிமா மீது இருக்கும் காதலை புரிந்து கொள்ள முடிந்தது. ஒளிப்பதிவாளர் வசந்த் எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். என்றார்.
நடிகை விஜி சேகர் பேசியதாவது, இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட இப்படம் எனக்கு ஒரு அடையாளம் கொடுக்கும் என்று நம்புகிறேன். ஒரு குறும்படத்தில் நடித்திருந்ததைப் பார்த்துவிட்டு என்னை அணுகி நான் படம் எடுக்கும் போது கண்டிப்பாக கூப்பிடுவேன் என்று இயக்குநர் ஜான் கிளாடி கூறினார். அது போல் கரெக்டாக என்னை கூப்பிடவும் செய்தார். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்றார்.