போட்டியே இல்லை ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆனார்கள் வேட்புமனு செய்தவர்கள் !

0

ராஜ்யசபா வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும்.வேறு யாரும் போட்டியிடாததால், 3 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல ராஜ்யசபா எம்பிக்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் ( காங்கிரஸ்), பூபேந்திர யாதவ் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடி வடைகிறது. பாஜ எம்பி கிரோடி லால் மீனா எம்எல் ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பரில் தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

logo right

இதனால், 3 இடம் காலியானது. ராஜஸ்தானில் 10 ராஜ்யசபா இடங்கள் உள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு 6 எம்பிக்களும் பாஜவுக்கு 4 எம்பிக்களும் உள்ளனர். 200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் பாஜவுக்கு 115 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 70 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

குஜராத் சட்டசபையில் இருந்து 4 ராஜ்யசபா உறுப்பி னர் இடங்களுக்கு பாஜ தேசி யத் தலைவர் நட்டா உட்பட பாஜவை சேர்ந்த 4 பேர் மனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், 4 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டனர்.

இதேபோல், மத்திய பிரதேசத்தில், காலியாகும் 5 இடங்களுக்கு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் எல். முருகன் உட்பட 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.