மகனை இந்தியா அழைத்து வர நெப்போலியன் எடுக்கும் ரிஸ்க் !

0

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன், இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர், ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறாராம் நெப்போலியன். இதுதவிர பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயமும் செய்து வருகிறார். மகன் மீது அதீத பாசம் கொண்ட நெப்போலியன், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி அருகே மயோபதி என்கிற ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்டி இருக்கிறார். அங்கு தன் மகனை போல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், யூடியூப்பர் இர்பானின் தீவிர ரசிகராம். இதை அறிந்த நெப்போலியன் கடந்த ஆண்டு இர்பான் அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் பிரம்மாண்ட மாளிகை போன்ற வீட்டை கட்டியுள்ளதை வீடியோவாக வெளியிட்டதோடு, அதில் தன் மகனுக்காக அவர் என்னென்ன வசதியெல்லாம் செய்து கொடுத்துள்ளார் என்பதையும் விவரித்தார்.

logo right

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்த இர்பான், நெப்போலியன் குடும்பத்தினருடன் கப்பலில் 7 நாள் சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது கடல் வழியாக அமெரிக்கா முழுவதையும் சுற்றிப்பார்த்துள்ளனர். இந்த பயணத்தின் போது தன் மகனுக்காக தான் இந்த பயணத்தையே ஏற்பாடு செய்ததாக கூறி இருக்கிறார் நெப்போலியன்.

நெப்போலியனின் மகன் தனுஷுக்கு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று ஆசையாம். அவரை விமானத்தில் அழைத்து சென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்களாம். இதனால் மகனை கடல் வழியாக இந்தியா அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறாராம் நெப்போலியன். கடல் வழியாக இந்தியா வர 70 நாட்கள் ஆகுமாம். அதனால் அதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக தான் தற்போது 7 நாள் பயணமாக அமெரிக்காவை கப்பலில் சுற்றிப்பார்த்துள்ளார் நெப்போலியன்.

அடுத்த ஆண்டு மகனை கப்பலில் இந்தியா அழைத்து வரப்போகிறாராம். கிட்டத்தட்ட வர மூன்று மாதங்கள், போக மூன்று மாதங்கள் என ஆறு மாதம் கப்பலில் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறாராம். எஞ்சியுள்ள 4 மாதங்கள் மகனுடன் இந்தியாவில் தங்க உள்ளாராம் நெப்போலியன். மகனின் ஆசையை நிறைவேற்ற ஆறு மாதங்கள் கப்பலில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ள நெப்போலியனின் இந்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.