மகிழ்வித்து மகிழ் வேற என்ன சொல்ல…
திருச்சி NO.1 டோல்கேட் அருகே வீடுகட்டியிருக்கிறார் புவனேந்திரன் அதில் என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள் அந்த அழைப்பிதழை நீங்களே பாருங்கள் உங்களுக்கே புரியும் மகிழ்வித்து மகிழ் என்பதை நன்றாக உணர்ந்து பத்திரிக்கை அடித்திருக்கிறார்.
அவரிடம் பேசினோம் நா வீடியோகிராபர் சார் எத்தனையோ வீட்டுக்கு புகைப்படங்கள் எடுக்க போயிருக்கேன் அவர்களில் சிலர் ஆதங்கப்பட்ட கதையும் நடந்து இருக்கிறது அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அழைப்பிதழ் என்றார்.
உழைத்தவர்களை மதிப்பது என்பதற்கு எப்படிப்பட்ட மனசு வேண்டும்.
வாழ்க வளமுடன் ! நலமுடன் !!