மக்கள் சேவையில் திருப்தியில்லை திகில் திருநாவுக்கரசர் !!
திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது…
கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை, தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி அதிமுக கூட்டணியில் யார். யார் உள்ளனர் என்பதை தெரிவித்துவிட்டு திமுக கூட்டணி குறித்து பேசட்டும்.
பாஜக தேசிய தலைவர் நட்டா வருவதால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்பட்டு விடாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தோழமை கட்சிகளைகூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் எம்.பி கார்த்தி தவறான நோக்கத்தில் பிரதமர் மோடி குறித்து பேசியிருக்க வாய்ப்பு இல்லை.
மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
கொரோனா பாதிப்பால் 2 ஆண்டுகள் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. எனது அரசியல் அனுபவத்தில் இந்த 5 ஆண்டுகள் தான் மக்கள் பணியாற்றியது திருப்தி இல்லாமல் உள்ளது. மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை மற்றும் திமுக கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். n எம்ஜிஆர் குறித்து எம்பி ஆ.ராஜா கருத்துக்கு அதிமுக விமர்சித்திருப்பது குறித்து கேட்டபோது, ’மறைந்த தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை தவிர்த்திருக்கலாம்,’ என்றார்.